இதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாம்தமிழர் கட்சி சார்பில் இன்று (18-ந்தேதி) இரவு சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடந்தது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் சாகுல்அமீது, கலைக்கோட்டுதயம், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, தடா சந்திரசேகர், கோட்டை குமார் அய்யநாதன், பால்நியூமன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்கள்.
நடிகர் சத்யராஜ் பேசும்போது, ’’நான் இந்த நாம் தமிழர் மேடையில் ஏன் ஏறியிருக்கிறேன் என்று நினைப்பீர்கள். நாம் தமிழர் மேடை மட்டுமல்ல. ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன்.
ஈழப்பிரச்சனையைக்கு மட்டும் ஏன் தொடர்ந்து குரல் கொடுக்கிறீர்கள் என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறேன். மற்ற பிரச்சனைகளை பேச நிறைய அமைப்புகள் இருக்கின்றன.
ஆனால் ஈழ மக்களுக்கு குரல் கொடுக்க சில அமைப்புகள் தான் இருக்கின்றன. அதனால்தான் அந்த சில அமைப்புகளோடு கைகோர்த்திருக்கிறேன்’’ என்று பேசினார்.


No comments:
Post a Comment