
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாம்தமிழர் கட்சி சார்பில் இன்று (18-ந்தேதி) இரவு சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடந்தது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
சீமான் பேசும்போது, ‘’காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன். அதே நேரத்தில் இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுங்கள் என்று வாக்கு சேகரித்தேன். இதனால் என்னை நிறைய பேர் கேலி செய்தார்கள்.
அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்... இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்ததற்காக இப்போது பெருமைப்படுகிறேன்.
ஈழப்பிரச்சனைக்கு குரல் கொடுப்பார் புரட்சித்தலைவி என்று எதிர்ப்பார்த்திருந்தோம். எங்கே செய்யாமல் விட்டுவிடுவாரோ என்று பயமும் இருந்தது. ஆனால் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்லலாமல் பிரதமரிடம் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
இனி அதிமுக எந்த காலத்திலும் காங்கிரசுடன் இணையக்கூடாது. காங்கிரசுடன் இணையவேண்டிய அவசசியமும் இல்லை அதிமுகவுக்கு. தனி செல்வாக்குடன் இருக்கிறது அதிமுக’’ என்று பேசினார்.


No comments:
Post a Comment