
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய " Sri Lanka_s Killing Fields "இலங்கையில் கொலைக்களம்" ஆவணக் காணொளி உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பது நிச்சயம்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று மாயையை காட்டி உலகத்தை ஏமாற்றிய சிங்கள இனவெறி அரசின் உண்மை முகத்தை திரையில் காட்டியது பிரித்தானிய தொலைக்காட்சி சனல்4.
ஆவணப்படம் வெளிவரும் இறுதி நிமிஷம் வரை அதை பார்க்க ஆவலாக இருந்த மற்றும் அதை பல்லின மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் இனி என்ன செய்யப் போகிறோம் .?????
காணொளியில் கண்டு கொண்ட கொடூரமான காட்சிகள் எம் கண்களில் கண்ணீர் வடிய செய்தன. எம் நெஞ்சம் வெடிக்கச் செய்தன. மனித உரிமைகளை பற்றி நிமிஷத்துக்கு நிமிஷம் பறை சாற்றும் இந்த உலகத்தின் கண் முன்னே இந்த நூற்றாண்டில் இப்படியான கொடுமைகளோ ?? என்று எமக்குள்ளே கேட்டு வெம்புகிறோம் .
2009 ஆண்டின் யுத்தத்தின் காலத்திலும் அத்தோடு யுத்தம் முடிவடைந்தது என்று சிங்கள இனவெறி அரசு அறிவித்ததின் பின்னரும் முதல் முதலாக தமிழர்கள் மீது சிங்கள இனவெறி பிடித்த அரசு மேற்கொண்ட போர்க்குற்ற ஆதாரம் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியாளர் அமைப்பு http://www.jdslanka.org/2011/06/sri-lankas-killing-fields_15.html சனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளியிட்டு இருந்தது .
சிங்கள இனவெறி அரசு இது செயற்கை ஊடாக தயாரிக்கப்பட்டது என்று ஆரம்பத்தில் கூறினாலும் , துறைசார் நிபுணர்களால் இது உண்மையான காணொளி என்று உறுதிப்படுத்தப்பட்டது.அன்றில் இருந்து உருளத் தொடங்கியது தான் உண்மையின் சாட்சி. இருந்தும் குறிகிய நாட்களுக்கு முன்னர் ஐக்கிய நாட்டின் சபை அதை மீள்உறுதிப்படுத்தியது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இப்படியான இனப்படுகொலையை தினம் தினம் வீதி வீதியாக உலகம் முழுவதும் கதறி கத்திக் கூறினோம். இறைவனிடம் மண்றாடினோம். அன்று உலகம் எங்களை பார்க்கவில்லை. இன்று எங்களை அனுதாபக் கண்ணோடு பார்க்கும் சில நாடுகள் கூட அன்று எம் மீதான இந்த இனப்படுகொலைக்கு துணை நின்றது. இன்று வெளிவரும் சிங்கள அரசின் இனவெறி பிடித்த கொடூரங்கள் உண்மையை நிலை நாட்டுகிறது .
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற சிங்கள அரசின் திரையிக்கு பின்னர் ஒளிந்த கிடந்த உண்மைகள் உலகம் பார்க்கிறது. ஈழத் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தின் உண்மையை உலகம் உணர ஆரம்பிக்கின்றது.
இந்த ஆவணக் காணொளியை சுட்டிக் காட்டி அனைத்து புலம் பெயர் தமிழீழ மக்களும் சிறப்பாக இளையோர்கள் தமது முகப்புத்தகத்தில் பிரச்சாரம் செய்தார்கள்.பார்ப்பதுக்கு மிகவும் எழுட்சியாக இருந்தது , எனினும் இனி என்ன செய்யப் போகிறோம் ???.
ஐநா அறிக்கை போலே இந்த ஆவணக் காணொளியும் தமிழர்களுக்கு கிடைத்த அரிய சந்தர்பம். இவைகள் ஊடாக எம் மீது சிங்கள இனவெறி அரசு மேற்கொண்ட இனப்படுகொலையை உலகத்துக்கு எடுத்துச் சொல்வோம். எம் உறவுகளுக்காக நீதி கேட்போம் . எம் விடுதலை வீரர்களின் கனவை நினைவாக்குவோம் .
இருந்தும் சர்வதேச உலகம் இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி இந்த உயிர்களை காப்பாற்றி எமக்கு நீதி வழங்கி இருக்கலாம் , ஆனால் இன்று எம் உறவுகளின் உயிர்களை எம் நெஞ்சில் பதித்து அவர்களின் உடல்களை எம் தோள்களில் தாங்கி அதே உலக நாடுகளிடம் நீதி கேட்டு செல்கின்றோம்
நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை


No comments:
Post a Comment