
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி இந்தியாவின் கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதென அரசாங்கத்துக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதென இன்றை திவயின சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளவை,
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிரஸ்தாப காணொளி போலியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின் சனல்4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தெரிய வந்துள்ளது.
இந்தக் காணொளி வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் என்ற பெயரிலான திரைப்படமொன்று கேரளாவில் திரையிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இத்திரைப்படம் தொடர்பில் இந்திய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்ததும் அத்திரைப்படம் மாயமாகி விட்டது.
செல்லிடத் தொலைபேசிகள் மூலமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் சனல் 4 காணொளிகள் வீடியோ கமெரா ஒன்றினாலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் மூலப்பிரதி இருக்குமாயின் தங்களுக்கு வழங்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றவோ, பதிலளிக்கவோ சனல் 4 தொலைக்காட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
தொலைக்காட்சி நிர்வாகத்தினர் அதனை இணையத்தளத்தில் தரவேற்றியுள்ளனர். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பரிசோதனைக்கு உட்படுத்த அதனை வழங்காமலிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment