இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த தகவலை லக்பிம செய்திதாள் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ம் திகதி முதல் 30 ம் திகதி வரை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறும் போது இதற்கான பிரேரணை நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதனை எதிர்க்கும் வகையில் ஏனைய நாடுகளின் உதவியை பெற இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 17 வது அமர்வு அண்மையில் நடைபெற்றபோது அதில் பங்கேற்ற இலங்கையின் தூதுக்குழுவினால், இலங்கைக்கு ஆதரவான நாடுகளை திரட்டுவதற்கு முடியவில்லை.
எனினும் 9 நாடுகள் மாத்திரம் இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளன.
பெரும்பாலும் அமெரிக்காவே இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் இணைந்து நடவடிக்கைகளை பான் கீ மூன் மேற்கொண்டு வருவதாக அவரின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment