
வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவதற்கு விரும்புவதாக ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகணங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடமாகாணத்திற்கென இதுவரை தனியானதொரு மாகாணசபை அமைக்கப்படவில்லை.
வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இரு மாகாணங்களுக்கும் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிழக்கு மாகாணத்திற்கான மாகாணசபைத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
இதேவேளை இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடனேயே வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment