
இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றை கனேடிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அரசாங்கம் முறியடித்துள்ளதாக தெரிய வருகின்றது.இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள சிபார்சுகளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என கனேடிய லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிகனீஸ் நேற்று (16) கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை முன்மொழிந்திருந்தார்.
அவர்கொண்டுவந்த தீர்மானத்தை கனேடிய ஆளுங்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற வாக்கெடுப்பில் முறிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் ஆளும் கட்சியான கொன்சவேட்டிவ் கட்சி தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை காலம் காலமாக மேற்கொண்டு வருவதுடன், சிறீலங்கா அரசின் இனப்படுகொலைகளுக்கும் மறைமுக ஆதரவுகளை வழங்கி வருகின்றதாக பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையிலேயே பிரஸ்தாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஏற்கெனவே கடந்த நாடாளுமன்றத் தோ்தலின் போது கனேடிய ஆளுங்கட்சி சன் சீ அகதிகள் கப்பலையும் தனது பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்ததுடன், அகதிகள் விடயத்திலும் இறுக்கமான போக்கைக் கடைப்பிடிக்கப் போவதாகக் கூறியே தோ்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment