
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பிரித்தானிய அரசு கொண்டிருக்கின்ற நிலைப்பாடு குழப்பமானதாக உள்ளது என லண்டனை தளமாக கொண்டு இயங்குகின்ற ஆயுத விற்பனைக்ளுக்கு எதிரான இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது.
பல மில்லியன் பவுண்டு பெறுமதியான ஆயுதங்களை இலங்கைக்கு பிரித்தானிய அரசு தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற அதே நேரம் இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறுகின்றது என இயக்கம் சுட்டிக் காட்டி உள்ளது.
2005 முதல் 2008 வரை இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் யுத்த நிறுத்தம் நிலவியது.18 மில்லியன் பவுண்டு பெறுமதியான ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்கள் ஆகியவற்றை அக்கால கட்டத்தில் பிரிட்டன் அரசு இலங்கைக்கு வழங்கியிருந்தது என இயக்கம் தெரிவித்து உள்ளது.
அதே போல 2009 ஆம் ஆண்டு 07 இலட்சம் பவுண்டு பெறுமதியான ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்கள் ஆகியவற்றையும், 2010 ஆம் ஆண்டு 01 மில்லியன் பவுண்டு பெறுமதியான ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்கள் ஆகியவற்றையும் இலங்கைக்கு பிரிட்டன் வழங்கி இருந்தது என இயக்கம் புள்ளி விபரம் இட்டு உள்ளது.
எனவே புலிகளை இல்லாது ஒழிப்பதற்கு இறுதி யுத்தத்தில் பிரிட்டனின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கவில்லை என தீர்க்கமாக சொல்ல முடியாது உள்ளது என இயக்கம் கோடி காட்டி உள்ளது.
இலங்கைக்கு இனி மேல் ஆயுதங்களை விற்பது இல்லையென தடை ஒன்றை கொண்டு வருவதுடன் கடந்த கால ஆயுத விற்பனையை பிரிட்டன் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று இயக்கம் கோரி உள்ளது.


No comments:
Post a Comment