ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையில் குற்றவாளியாகக் காணப்பட்ட இலங்கைக்கு மலேசியா ஆதரவு வழங்குகிறது. தமிழர்கள் மொழி, மத அடையாளங்களுடன் மலேசியாவின் வளர்ச்சிக்கு உதவும் சிறப்புடன் வாழும் இந்த நாடு இலங்கைக்கு ஆதரவு வழங்குவதை ஏற்கமுடியவில்லை.தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மஇகா என்ற மலேசிய இந்திய காங்கிரஸ் ஆளுங் கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வருடம் மலேசியத் தலைநகர் கோலா லம்பூர், தமிழ் நாடு தலைநகர் சென்னை ஆகியன சகோதர நகரங்களாகப் (Sister Citie) பிணைக்கப்பட்டுள்ளன.
தமிழ் நாடு மாநில உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மலேசிய அரசு உத்தியோ பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் தமிழர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற குரல் வலுத்துவருகிறது.
புறோகம் (Proham) என்ற மனித உரிமைகளை மேம்படுத்தும் மலேசிய அமைப்பு (Persatuan Promosi Hak Asasi Manusia) இந்த விடயத்தில் தீவிர கவனஞ் செலுத்துகிறது. மலேசியாவின் முன்னணிக் கல்விமான்களும் தொழிலளிதபர்களும் இந்த அமைப்பின் பின்னணியில் செயற்படுகின்றனர்.
மலேசியாவின் மூன்று தமிழ் நாளேடுகளும் இரண்டு ஆங்கிலப் பத்தரிகைகளும் இது தொடர்பான முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளன. மலே மொழி, சீன மொழிப் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
காசாவில் (Gaza) இஸ்ரேலியப் முப்படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட மக்களுக்கு அண்மையில் மலேசியாவின் தொண்டர்கள் கப்பல் மூலம் நிவாரண உதவிகளை எடுத்துச் சென்றனர். இஸ்ரேயில் கடற்படையினர் சூடு நடத்தி இந்த மனித நேயப் பணியைத் தடுத்துள்ளனர்.
இஸ்ரேயில் நாட்டுடன் நெருக்கமான படைத்துறை உறவுகளைப் பேணும் இலங்கைக்கு வழங்கும் ஆதரவை மீளப்பெற வேண்டும் என்று மலேசியாவின் முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


No comments:
Post a Comment