தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான தாக்குதல் 1974, 1983 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளை ஞாபகம் ஊட்டுவதாக இருந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி எமது இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் அளவெட்டி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் கூட்டத்தின் போது கூட்டத்தில் புகுந்த சீருடை தரித்த குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே சிறிதரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
போர்க்குற்றங்களை மறைப்பதற்காக இவ்வாறான இராணுவக் கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.


No comments:
Post a Comment