யாழ்ப்பாணத்தில் பெண்களிடமும் ஒழுக்கம் கிடையாது என அவர் தெரிவித்தார். கடந்த எட்டு வருடங்களாக நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றியிருந்தேன். நான் அங்கு கடமையாற்றிய காலத்தில் இப்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் காணப்படவில்லை. வன்னியில் காணப்பட்ட ஒழுக்கம் தற்போது யாழ்ப்பாணத்தில் இல்லை என அவர் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் செயலில் மட்டுமல்ல பேச்சிலும் தொடர்கின்றன. எத்தனையோ இளம் சிறுவர்கள் இந்த துஷ்பிரயோகங்களால் தினமும் மரணித்துக் கொண்டிருக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் 500 சிறுவர்கள் வரையில் கல்வி கற்காமல் இருக்கின்றனர். இவர்கள் கற்காமல் விட்டமைக்கான காரணங்கள், வறுமை, சகபாடிகளின் தொல்லை, தீராத நோய்கள் எனக் கூறலாம்.
இவையனைத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சினைகளுக்குரிய மிகப் பிரதானமாக இருக்கும் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினை நீக்கப்பட வேண்டும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளை அதிகம் குற்றஞ்சாட்டி வரும் இமெல்டா சுகுமார் தன்னை மறந்து இங்கே ஒரு உண்மையைக் கூறிவிட்டார். வன்னி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காணப்படவில்லை என அவரே கூறியுள்ளார். இவர் வன்னி மாவட்டத்தில் இருந்த காலகட்டத்தில் புலிகள் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. அக் கால கட்டத்தில் ஒழுக்கம் எவ்வாறு இருந்தது என்பத்னை இவரே தற்போது தன் வாயால் கூறும் நிலை வந்துள்ளது!


No comments:
Post a Comment