முப்படைகளின் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் வழங் கப்பட்டுள்ள சிறைத் தண்டனை குறித்து நீதிமன்றில் விசாரணை செய்ய முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.மேலும் குறித்த தீர்ப்பிலிருந்து நிவாரணம் பெறவேண்டுமாயின் மனுவை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இராணுவ நீதிமன்றில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள 30 மாதகால சிறைத் தண்டனைக்கு எதிராக சரத்பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுநேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது இராணுவ நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பை நாட்டின் தலைவர் மற்றும் முப்படைகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் கருத்துத் தெரிவித்த அரசு பிரதிசட்டத் தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசியல் யாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய இரண்டாவது இராணுவ நீதிமன்றின் தீர்ப்பை நீதிமன்றில் விசாரணை செய்ய முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறித்த தீர்ப்பிலிருந்து நிவாரணம் பெற வேண்டுமாயின் மனுவை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அரசு பிரதி சட்டத்தரணி கூறியுள்ளார். குறித்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment