சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர்களில் ஒருவரான கால்லம் மன்ரே என்பவர் பிரி்த்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பிரஸ்தாப வேண்டுகோளை முன்வைத்து வருவதாக இன்றைய திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
"இலங்கையின் படுகொலைக்களம்" காணொளி சனல் 4 தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்டதன் பின் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரித்தானியத் தமிழர் பேரவை என்பவற்றின் முக்கியஸ்தர்கள் சனல் 4 முக்கியஸ்தர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது பிரஸ்தாப விடயம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதனையடுத்து தற்போது இலங்கையின் போர்க்குற்றங்கள் சோ்பியாவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களுக்கு ஒப்பானது என்ற பிரச்சாரத்தை சனல் 4 தொலைக்காட்சிச் சேவை ஆரம்பித்துள்ளது.
இதுவரையில் இலங்கையின் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி மூன்று ஒளிநாடாக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment