
பலாலி விமானத்தளத்தில் சரக்கு விமானங்களும் வந்திறங்கக்கூடியதகா 150 மீற்றர் நீளமான ஓடுபாதை அமைக்கப்படும் என்று யாழ் இந்தியத் துணைத்தூதரக தலைமை அதிகாரி வி.மகாலிங்கம் தெரிவித்தார்.
காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிதைந்த கப்பலின் பாகங்கள் அகற்றப்பட்டதும் துறைமுக அபிவிருத்தியும் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றும், அதுபோல் வட பகுதிக்கான ரயில் பாதையும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் துரிதமாக அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் புதிய விமானப் பயண முகவர் நிலையமொன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியமானது என்று இங்கு குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தை சுற்றுலாத்துறையில் பிரகாசிக்கும் பிரதேசமாக மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசாங்கமும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.


No comments:
Post a Comment