
சனல்4 தொலைக்காட்சியில் இடம்பெற்ற சிறீலங்காவின் கொலைக்களம் நோர்வேயின் தேசிய ஊடகமான NRK2இல் எதிர்வரும் செவ்வாய்(27.09.2011) இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
நோர்வே ஈழத்தமிழர் அவையின் நீண்ட முயற்சியின் பயனாக சிறீலங்கா பேரினவாத அரசால் தமிழ்மக்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கோரக்கொலைகளின் காட்சி பெட்டகம் நோர்வேயிலும் முதல் முறையாக ஒளிபரப்பப்படவுள்ளது.
ஆகவே நோர்வேயில் வாழ்கின்ற தமிழ் உறவுகள் நோர்வேஜிய நண்பர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் இச்செய்தியை பரிமாறி அதிகமான மக்கள் பார்ப்பதர்க்கு பரப்புரையை மேற்க்கொள்ளவேண்டும் எமது மக்கள் பட்ட துன்பதுயரங்கள் ஏக்கங்கள் வீண்போகாது அவர்களின் சுதந்திமான வாழ்வுக்காக சர்வதேசப்பரப்பில் போராடவேண்டிய பாரிய பங்கு எம்மிடமுள்ளது.
இந்த தார்மீகக்கடமையை அனைவரும் உணர்ந்து நாகரீக உலகத்தில் எமது உறவுகள் அநியாயமாக கொல்லப்பட்ட கொலைக்கள காட்சிகளை சர்வவேச சமுகத்தின் கண்களின் ஊடாக இதயத்தில் ஈரத்தை ஏற்படுத்த ஒன்றுபடுவோம்.வேலைத்தளங்களில் பாடசாலைகளில் உங்களின் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் காலத்தின் தேவையுணர்ந்து கைகோர்த்து ஞாலத்தினை வெல்வோம்.


No comments:
Post a Comment