கடந்த 2008 ம் ஆண்டு மேற்கண்ட ஸ்ரெலத் பென்ஸ் இரகத்திலான விசேட காரை பிரான்சிய நிறுவனமான அமேஸ் உருவாக்கிக் கொடுத்துள்ளது. மொத்தம் 26.5 மில்லியன் யூரோவுக்கு பிரான்சிய – லெபனான் ஆயுத விற்பனையாளர் ஒருவர் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த விற்பனைக்கான படிவத்தில் இப்போதைய பிரான்சிய அதிபர் நிக்கொலாய் ஸார்கோஸி கையொப்பமிட்டுள்ளார்.
சர்வதேச பயங்கரவாதிகளான அல் குவைடாவிடமிருந்து தப்புவதற்காக கடாபிக்கு இக்கார் விற்கப்படுவதாக இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக அல் குவைடாவின் பெயரில் நடந்த இன்னொரு தவறு இதுவாகும். இதுபோலவே பயங்கரவாதம் என்ற பெயரைப் பயன்படுத்தி இலங்கை வன்னியில் போர்க்குற்றம் நிகழ்த்தப்பட்டது கவனிக்கத்தக்கது.


No comments:
Post a Comment