
இலங்கை ஆட்சியாளர்களால் காலம் தொட்ட தமிழ் மக்களை அடியோடு அழிப்பதற்கான திட்டமிடல்கள் வகுக்கப்பட்டு வருகின்றமை வழமை.
அத் திட்டமிடல்கள் சிலவேளைகளில் தோல்வியைக் கண்டிருந்தாலும் கூட அண்மைக் காலத்தில் பெரு வெற்றியை ஆட்சியாளர்களுக்கு அளித்துள்ளது எனலாம்.
ஏனெனில் எம்மினத்தின் சில புல்லுருவிகள் குருவிச்சை மரம் போன்று ஒட்டி நிற்பது அவர்களுக்குத் தற்காலத்தில் ஏற்பட்ட வெற்றிகளுக்குக் காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று.
இது இவ்வாறிருக்க இலங்கையில் விபச்சாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என ஒரு அதிர்ச்சித் தகவல் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
அதேநேரத்தில் யாழ்ப்பாணத்தின் தாவடி, மானிப்பாய்ப் பகுதியில் மகரகமவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள இளம் பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும், அப் பெண் பாலியல் தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டதாகவும் பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.
எனவே இவ்வாறான சம்பவங்கள், தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளைகளில் யாழ்ப்பாண இளைஞர்களை பால் நிலை கொண்டு தாக்கும் ஒரு செயற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருகின்றது எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
அதாவது யாழ்ப்பாண இளைஞர்களின் போராட்டங்களையும், அவர்கள் கொண்டுள்ள தமிழ்த் தேசிய உணர்வலைகளையும் திசை திருப்பும் நோக்கத்தோடும் இத்தகைய செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது எனலாம்.
யாழ்ப்பாபணப் பகுதிகளில், பாலியல் தொழிலில் ஈடுபடும் சிங்களப் பெண்களைக் களமிறக்கி அப் பகுதி இளைஞர்கள் மத்தியில் பாலியல் தொடர்பான நோய்களைப் பரப்பி அவர்களை அழிக்கும் ஒரு நயவஞ்சகச் செயல் நடந்தேறுவதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகின்றது.
எனவே கடந்த கால ஆட்சியாளர்களினால் தமிழ் மக்களை அழிக்கும் திட்டமிடலுக்கு ஏற்ப தற்கால அரசு இச் சூழ்ச்சியைச் செய்து யாழ்ப்பாண மக்களின் கலாசாரத்தைச் சிதைத்து இளைஞர்களை இயற்கையின் உபாதைக்குள் தள்ளும் ஒரு திட்டம் நடந்தேறப் போகின்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது.


No comments:
Post a Comment