
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட பலர் இனங்காணப்பட்டுள்ளதாக ரொயட்டர் செய்திசேவை தெரிவித்துள்ளது. ரொயட்டர் செய்திச்சேவை கிளிநொச்சியில் சேகரித்த தகவல்களின்படி, இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் போரின் போது முகங்கொடுத்த கோரங்களில் இருந்து மக்கள் இன்னும் மீளத்திரும்பவில்லை
ரஞ்சனி என்ற பெயரைக்கொண்ட பெண் ஒருவர், போரின் போது தமது தாயின் சடலம் எரியுண்டதையும், தமது சகோதரி இரத்தம் தோய்ந்த நிலையில் வீழ்ந்து கிடந்தமையையும் உறவினர்கள் கண்முன்னே கொல்லப்பட்டமையையும் நினைவுக்கூருவதை ரொயட்டர் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தனை சம்பங்களை நேரில் கண்ட தாமும் இறந்திருக்கவேண்டும் என்றும் ரஞ்சனி கூறிய கருத்தை ரொயட்டர் கிளிநொச்சி மக்களின் எதிர்கால வாழ்வின் சந்தேகத்துக்கு உதாரணமாக காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நிதியின் கீழ் கிளிநொச்சியில் பணியாற்றும் தன்னார்வ தொண்டர் ஒருவர், இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள், முன்னெடுக்கப்படுகின்ற போதும் மக்கள் வாழ்வியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தற்கொலை சம்பங்களும் துர்நடத்தைகளும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சிலர் தமது மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காக விலைக்குறைந்த மதுபானங்களை வீதியோரங்களில் இருந்து அருந்;துவதாக ரொயட்டர் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை போரின் பின்னர் சிலரே தமது மன அழுத்தங்களுக்காக ஆலோசனை பெற்றுக்கொள்கின்றனர்.
கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூவபதி கேதீஸ்வரனின் தகவல்படி, உளவியல் மனோதத்துவ நிபுணர்கள் உரிய எண்ணிக்கையில் இருந்தால், தமது மாவட்டத்தில் மன அழுத்தம்; என்ற பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் 120 ஆயிரம் பேருக்கு ஒரு மனோதத்துவ நிபுணர் மாத்திரமே பணியில் இருப்பதை ரூபவதி கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்


No comments:
Post a Comment