கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் சட்டமன்ற தேர்தலைப் போலவே, வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக.சட்டமன்ற தேர்தலில் போராட்டம் நடத்தி, உருவபொம்மையை எரித்து தொகுதிகளை கேட்டு வாங்கிய தேமுதிக, தற்போது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை எதிர்த்து வாய் திறக்க முடியவில்லை.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்பதையும் மறந்து அதிமுக உறுப்பினர்களாகவே தங்களை நினைத்து நடந்துகொண்டபோதும், அதிமுக தலைமை இரக்கம் காட்டவில்லை என்று புலம்பி வந்தனர் தேமுதிகவினர்.
இதனால் கட்சித் தொண்டர்களை இழக்கக் கூடாது என்று முடிவெடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.
இதையடுத்து தேமுதிகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதில் 9 மாநகராட்சிகளுக்கான மேயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மேயர் வேட்பாளர் – கோ.வேல்முருகன்
மதுரை மேயர் வேட்பாளர் – கா. கவியரசு
கோயம்புத்தூர்மேயர் வேட்பாளர் – ஆர்.பாண்டியன்.
சேலம் மேயர் வேட்பாளர் – ஏ.ஆர். இளங்கோவன்.
திருநெல்வேலி மேயர் வேட்பாளர் – ஏ.சீதாலட்சுமி
வேலூர் மேயர் வேட்பாளர் – எஸ்.சத்தியவாணி சுரேஷ்பாபு
ஈரோடு மேயர் வேட்பாளர் – என்எஸ் சிவக்குமார்
திருப்பூர் மேயர் வேட்பாளர் – என்.தினேஷ்குமார்
தூத்துக்குடி மேயர் வேட்பாளர் – எஸ்.ராஜேஷ்வரி
இந்த வேட்பாளர்களின் வெற்றிக்கு கழகத்தின் மாவட்ட, பகுதி, வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளார்.


No comments:
Post a Comment