வவுனியா மாவட்டத்தின் பிரபல ஊடகவியலாளரும் மூத்த ஊடகவியலாளருமான தம்பு விவேக ராசா(வயது-53) நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வவுனியா வைத்தியசாலையில் மரணமானார். கடந்த 10 நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று சனிக்கிழமை நள்ளிரவு மரணமானார்.
தம்பு விவேக ராசா கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் கடமையாற்றி வருவதோடு வன்னி ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றி வந்தார்.
மூத்த ஊடகவியலாளர் தம்பு விவேக ராசா தினகரன் பத்திரிகையின் வவுனியா நிருபராக நீண்டகாலம் பணியாற்றிய இவர் வேறு பத்திரிகைகளுக்கும் இணைய ஊடகங்களுக்கும் சர்வதேச ஊடகங்களுக்கும் இறக்கும் வரையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment