தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அரசியல் அலுவலகம் நேற்று முன்தினம் பாண்டிருப்பு நற்பிட்டி முனை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
இந்தப் பணிமனைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வில்லியம் தோமஸ் தலைமையில் நடைபெற்ற திறப்புவிழாவில் கலந்துகொண்ட நா.உ. சுமந்திரன் தொடர்ந்து தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பியசேன தமிழ் மக்களுக்கும் கட்சிக்கும் துரோகமிழைத்துச் சென்றதன் பின்னர் அம்பாறை மாவட்டத்துக்கு நாம் வருகை தந்து கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட பணிமனை ஒன்றை இங்கு திறந்து வைக்கவேண்டுமென ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எமது எட்டு மாவட்டங்களிலும் பத்து பணிமனைகளை திறக்க முடிவெடுத்துள்ளோம். யாழ்ப்பாணத்தில் இரண்டு, அம்பாறையில் இரண்டு ஏனைய மாவட்டங்களில் தலா ஒன்று என்ற அடிப்படையில் கட்சியின் மாவட்டப் பணிமனைகளைத் திறப்பதற்கு உத்தேசித்துள்ளோம். இதில் முதலாவது பணிமனை கல்முனையில் திறந்து வைக்கப்படுகிறது.
எடுத்துக் காட்டாகவும், முன்னோடியாகவும் இப்பணிமனை திகழ்வதுடன் இளைஞர்களது அபிலாசைகளும் இப் பணிமனை மூலம் நிறைவேற்ற வேண்டும். இது தவிர இன்று ஊடகங்கள் விநோதமான விடயங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசோடு ஒரு பேச்சை நடத்தியது. அந்தப் பேச்சு முன்னேற்றம் இல்லையெனச் சொல்லியவுடன் நாங்கள் அதனை இடைநிறுத்தி அரச நிலைப்பாட்டை, அவர்களுடைய பதிலைத் தந்தால் தொடர்ந்து பேசுவோமெனச் செல்லியிருந்தோம். அந்த அடிப்படையில் திரும்பவும் நாங்கள் பேச்சை ஆரம்பித் திருக்கிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும். அந்தப் பேச்சின் இறுதி முடிவைத்தான், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் முடிவாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தெட்டத் தெளிவாக சர்வதேச சமூகம் தெரிவித்து விட்டது
இவ்வேளையில் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறைந்து கிடக்கும் பொறிக்குள் விழப் போகின்றது. அதனை நாங்கள் காப்பாற்றி விட வேண்டும், பொறிக்குள் சிக்கப் போகிறார்கள் என்று திடீரென அங்கலாய்க்கின்றனர்.
இவர்களது நற்சிந்தனைக்கு நன்றி கூறும் அதேவேளை இப்படியான எந்தவித பொறிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்காது என்பதையும் எடுத்துக் கூறவிரும்புகின்றோம்.
இன்று தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளாக சர்வதேச சமூகமே கூட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அரசு கூட புறக்கணிக்க முடியாத அளவுக்கு, மக்களுடைய வாக்குப் பலத்தினால், தமிழ் மக்களுடைய அபிலாசைகளை எடுத்துக் கூறத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் பெற்றுள்ளது.
எனவே நாங்கள் செய்யும் கருமங்களைப் பொறுப்போடு செய்வோம். முதிர்ச்சியடைந்த, காலாகாலமாக நீங்கள் அறிந்த தலைவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்குகின்ற கட்சி தான் நமது கட்சியாகும். விசேடமாக இளைஞர்கள் அணி திரண்டு கட்சிக்கு மெருகூட்டி மேலும் வலுவடையச் செய்ய வேண்டும். என்றார்
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், முதன்மை வேட்பாளர் கு.ஏகாம்பரம் ஆகியோரும் உரையாற்றினர்.


No comments:
Post a Comment