இலங்கையின் முன்னணி ஆங்கில செய்தி ஊடகமான லக்பிம நியூஸ் இணையத்தளத்துக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
லிபியா தொடர்பிலான சர்வதேசத் தலையீடு ஒன்று இருப்பது போன்று இலங்கை மீதும் சர்வதேசத் தலையீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடாக இருக்கின்றது.
திட்டமிடப்பட்ட ரீதியில் வேண்டுமென்றே சிவிலியன்களை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான தெளிவான சாட்சியங்கள் கிடைத்திருப்பதன் காரணமாக இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணையொன்று மேற்கொள்ளப்படுவதற்கு போதுமான காரணங்கள் இருக்கின்றன.
அவ்வாறு நடக்கவில்லை என்று இலங்கை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதளவுக்கு சாட்சியங்களும், தடயங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment