இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான சனல் 4 ஊடக காணொளி குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பொதுநலவாய நாடுகள் செயலகம் அறிவித்துள்ளது.பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடான இலங்கை இந்த குற்றச்சாட்டுக்களை கடுமையாக நிராகரித்து வரும் நிலையில், பொதுநலவாய செயலகம் இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளி தொடர்பில் பல்வேறு கருத்துகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் பொதுநலவாய செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் நிலைப்பாடு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகம அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 காணொளிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், 2018ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் பின்னணியில் பொதுநலவாய நாடுகள் செயலகம் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை இலங்கைக்கு பாரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment