நேற்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஜெயக்குமாரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கோரினார்.இதன்போது, யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து கடத்தப்படும் பொருட்கள், யாழ்.மாநகர சபை வாகனங்களிலேயே கடத்தப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் தெரிவித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளனர்.
கலந்துரையாடலின் போதே நிர்வாக உத்தியோகத்தர் தம்மிடம் தெரிவித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மேற்படி விடயத்தை அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மாநகர மேயரும் உடன் இருந்ததால் அமைச்சர் கடுப்பாகி போனதோடு இதனை விசாரிக்குமாறும் மேயரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வைத்தியர் ஜெயக்குமாரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் அமைச்சர் மன்னிப்பு கோரினார்.
மேலும், இவ்வாறான தாக்குதல்கள் வைத்தியர்கள் மீது இனிவரும் காலங்களில் இடம்பெறாதது என உறுதியளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment