பிரான்சில் வாழும் தமிழ் இளைஞரான கெவின் வலத் தேசர் பரிஸின் புறநகரான செவி ல றூ நகரசபையினால் அதிசிறந்த விளையாட்டு வீரனாக மதிப்பளிக்கப்பட்டிருகின்றார். செவில றூ விளையாட்டு வீரர்களைக் கௌரவப்படுத்தும் மாலை விழா ஒன்று அண்மையில் செவி ல நூவில் இடம் பெற்ற போதே இந்த இளைஞர் கௌரவிக்கப்பட்டார்.2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி பிரான்சின் பிராந்தியங்களுக்கி டையிலான மரதன் ஓட்டப் போட்டி பரிஸ் புறநகர் பகுதியான பொந்தோ கொம்போவில் நடைபெற்றது. இதில் வெற்றியீட்டிய கெவினுக்கு 2010/2011 ஆம் ஆண்டுகளுக்கான விருதும், 2011 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறையின் சிறந்த இளம் சாதனையாளர் விருதும், செவி ல நூவா நகர விளையாட்டுத் துறை அதிபர் லுக் வொல் வோடிச் மேயர், கிறிரியன் ஹெர்வே ஆகியோரால் வழங்கப்பட்டது.
விளையாட்டுத்துறையில் இளையவரான கெவின் தன்னுடன் போட்டியிட்டவர்கள் ஆச்சரியப்படும் வகையில் முன்னணியில் ஓடியதுடன், இறுதிவரை தனக்குப் போட் டியாக இருந்த எட்டுப் பேரையும் பின்தள்ளி இலக்கை அடைந்தது வியந்து பாராட்டும் வகையில் அமைந்திருந்ததாகவும் பயிற்சியாளர் ஒலிவியே குறிப்பிட்டுக் கூறினார்.
300 மீற்றர் ஓட்டப்போட்டியில் மாநில வாரியாகவும் இல் டே பிரான்ஸ் பரிஸ் பெரும்பகுதி, பிராந்திய வாரியாகவும் கெவின் வெற்றி பெற்று சம்பியனாகியதுடன் பிரான்சின் முன்னைய சம்பியனை விட அதிக இடைத்
தூர வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதும் தேசிய ரீதியில் 5 ஆவது இடத்தை வகிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment