
மிஸ்டிக் பிலிம்ஸ் அவுஸ்ரேலியா சார்பில் அவுஸ்ரேலியா வாழ் தமிழர் ஆனந்த் மையூர் ஸ்ரீநிவாஸ் தயாரித்து இயக்கியுள்ள ஈழத்தமிழர்களை பற்றிய படம் மிதிவெடி.
இந்த கதை இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் கண்ணிவெடிகலாள் எப்படி பாதித்து கொண்டிருக்கின்றனர் என்பதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இது சர்வதேச திரைப்பட விழாவிற்கும், உலக சினிமாவிற்கும் கொண்டு செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
திரைக்கதை ஆனந்த் மையூர் ஸ்ரீநிவாஸ். ஒரு ஈழத்து இளம் பெண் கைகுழந்தையுடன் கண்ணிவெடி நிறைந்த இடத்தில் வந்து மாட்டிக்கொள்கிறாள். அவளை இலங்கை இராணுவ அதிகாரி, விடுதலைப்புலி உறுப்பினர் என்று சந்தேகப்பட்டு பிடித்து வைத்திருக்கின்றார்கள்.
அந்த ஈழத்து பெண் கண்ணிவெடி நிலத்திலிருந்தும், அந்த இராணுவ அதிகாரியிடம் இருந்தும் தப்பிக்கிறாளா இல்லையா என்பதே கதை. இதில் இராணுவ அதிகாரியாக டேனியல் பாலாஜியும், ஈழத்து பெண்ணாக நீலீமா ராணியும் நடித்து உள்ளனர்.


No comments:
Post a Comment