மெக்சிக்கோவின் தென்பகுதியை பலத்த நிலநடுக்கமொன்று நேற்று உலுக்கியதில் 20 பேர் உயிரிழந்தனர். அதன் அதிர்வு தலைநகர் மெக்சிகோ சிட்டியிலும் உணரப்பட்டுள்ளது.மெக்சிகோ உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 7.47 அளவில் இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.
நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவு பதிவானதாகவும், மெக்சிகோ சிட்டியின் தென் மேற்காக 166 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 65 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment