
வணக்கம் நண்பர்களே!
முல்லைப் பெரியாறு விவகாரம் எங்கு வந்து நிற்கிறது என்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது! தமிழன் என்றாலே என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று கேரள மாநிலத்தவர்கள் நினைத்துவிட்டார்கள் போலும்! கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வன்முறைகளினால் பதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை எண்ண வருத்தமாக உள்ளது! அவர்களுக்கு எமது ஆதரவை தெரிவிப்போம்!
அன்று முல்லைத்தீவு! இன்று முல்லைப் பெரியாறு!!
” தமிழன் தானே! அடித்தால் யார் கேட்கப்போகிறார்கள்?” என்கிற தெனாவெட்டுத்தான், இவ்வளவு வன்முறைகளுக்கும் காரணம்! அங்கே, பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது போதாது என்று, இங்கேயும் ஆரம்பித்துவிட்டார்கள்! மொத்தத்தில் தமிழன் என்றாலே பொறுமதியற்றவன் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணம் போலும்!
ஈழத்தமிழனுக்கு துன்பம் வரும் போதெல்லாம், தமிழக தமிழர்கள் துடித்து எழுந்ததை, எமக்காக கண்ணீர் சிந்தியதை, தீயில் வெந்து குரல் எழுப்பியதை.... நாம் மறந்துவிடவில்லை! இப்போது தமிழக தமிழன் அடிவாங்குகிறான்! நாம் பார்த்துக்கொண்டு இருக்கலாமா?
வாருங்கள் நண்பர்களே! ஓங்கிக் குரல் கொடுப்போம்! தமிழனுக்குத் தமிழனே துணை! நாம் இனி யாரையும் நம்பி பயன் இல்லை! எமக்காக எவரேனும் குரல் தருவர் என்று நம்புவதிலும் அர்த்தம் இல்லை! பாதிக்கப்பட்ட தமிழக உறவுகளுக்காய் உரத்து குரல் எழுப்புவோம்! இணையத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்!
ஈழத்தில் நாம் அடிவாங்கிய சம்பவமும்,
கேரளாவில் தமிழக உறவுகள் அடிவாங்கும் சம்பவமும் எமக்குச் சொல்லிநிற்பது ஒன்றே ஒன்றுதான்!
உலகில் எங்கோ ஒரு மூலையில் தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு அவசியம்


No comments:
Post a Comment