
முன்னாள் போராளிகள் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சிங்களத்தில் பாடல்களைப் பாடினர். முன்னாள் போராளிகளை சமூகத்தில் இணைக்கும் நிகழ்விலேயே அவர்கள் 3 சிங்களப் பாடல்களைப் பாடினர்.
சிங்கள மொழியில் மூன்று பாடல்கள் பாடிய முன்னாள் புலிகள் தமிழ் மொழியிலும் ஒரு பாடல் பாடினர். இசைக்கருவிகளை இசைத்தவாறே பாடினார்கள். "வாடா மாப்பிளை வாழைப்பழத் தோப்பிலே'' என்ற பைலாத் தமிழ் சினிமாப் பாடலை அவர்கள் நயம்பட இசைத்தனர்.
முன்னாள் போராளி புனர் வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் இன்னமும் 800 பேர் விடுவிக்கப்பட வேண்டி உள்ளனர் என்றும் கூறினார்.
"முன்னாள் போராளிகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் வேறுபடுத்திப் பார்த்தது கிடையாது. விளையாட்டு, கல்வி, கலை, கலாசாரம் ஆகிய துறைகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். தெரிவுகளை மேற்கொண்டு தேசிய ரீதியான விளையாட்டு அணிக்கு இவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுள் கடந்த ஒரு வருடத்தில் ஆயிரம் பயனாளிகளுக்கு 160 மில்லியன் ரூபா சுயதொழில் கடன் வழங்கி இருக்கிறோம். முன்னாள் போராளிகள் 200 பேரும் இதில் நன்மையடைந்துள்ளனர் ''என்று அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்வில் புனர்வாழ்வு அதிகாரசபை அதிகாரி சந்தனராஜா குரு, புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் சமரசிங்க, அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க, அரசு கட்சி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான மு.சந்திரகுமார் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.


No comments:
Post a Comment