தமிழரான 48 வயதுடைய சுப்பையா தர்மசீலன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டுக்காக பிரித்தானியாவில் நான்கு பேருக்கு 20 முதல் 27 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்தக்கொலை கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்தநிலையில் விசாரணைகளின் பின்னர் Birmingham Crown Court பேமிங்காம் நீதிமன்றம் கொலையில் சம்பந்தப்பட்ட நால்வருக்கும் சிறைத்தண்டனையை விதித்தது.
Twins Ian, John Meenan, Anthony Bayliss , Liam Ryan ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கின் ஐந்தாம் எதிரியான James Moore, என்பவருக்கு 6 வருட சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது.
25, of Twickenham Road, Kingstanding என்ற இடத்தில் அமைந்திருந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மசீலனின் வியாபாரத்தளத்திற்கு இரவில் சென்ற குறித்த நால்வரும் தர்மசீலனை தாக்கி கொலை செய்தனர்.
இந்தக்கொலை காட்சியை தர்மசீலனின் பிள்ளைகள் கண்காணிப்பு புகைப்படக்கருவியின் மூலம் நேரடியாக அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்தே குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையில் தண்டனை பெற்றுள்ள நால்வரும் தாம் கொள்ளையிட்டமையை ஏற்றுக்கொண்டனர். எனினும் கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனினும் தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் நால்வருக்கும் தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.


No comments:
Post a Comment