
கடந்த போர்களிலும் நடந்து முடிந்த பின்னும் எங்கள் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களை விடுவிக்குமாறு கூறுவதைவிட தன்னால் வேறு என்ன தான் சொல்ல முடியும்...?
என ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பேதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் யாழ்ப்பாணத்தில் காணாமல் போயுள்ள லலித் குமார வீரராச் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன.?
என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது..
அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றில் கூறப்பட்டதை கேட்டிருக்கிறேன்.
காணாமல் போயுள்ளமை தொடர்பில் எனக்குத் தெரியாது.
கடத்தப்பட்டிருந்தால் விடுவிக்குமாறே கோர முடியும்.
என்று பதிலளித்தார்.
இதேவேளை, கடத்தப்பட்ட அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளர் அமல் ரொட்ரிகோ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெகலிய,..
அது தொடர்பிலும் தனக்குத் தெரியாது என்றார்.
எனினும் கடத்துபவர்கள் காணாமல் போகின்றவர்கள் தொடர்பில் தன்னைவிட ஊடகங்களுக்கு நன்கு தெரியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிளாஸ்டிக் பெட்டி சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட மாட்டாது. அது பொது சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். அச்சட்டத்தை ஒரு மாதம் இடைநிறுத்தி வைத்துள்ளமை விவசாயிகள், வர்த்தகர்களை தெளிவுப்படுத்தவே என கெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
எனினும் வட்டக்காய், புடலங்காய் உள்ளிட்ட சில மரக்கறி வகைகளுக்கு பிளாஸ்டிக் பெட்டிகளை பயன்படுத்த முடியாமை தொடர்பில் நேற்றைய சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 100% சரியாக செயற்படுத்த முடியாது எனவும் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தாமல் பிளாஸ்டிக் திட்டத்தை அமுல்படுத்தியமை அரசாங்கத்தின் தவறு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் திட்டம் கட்டாயம் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் லாபத்தை எதிர்பார்ப்பதைவிட மரக்கறி, பழங்கள் வீணாவதை தடுப்பதே நோக்கம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அப்படி என்றால் இந்த வட்டக்காய்கறிகளை விட எங்கள் உயிர்கள் விலை போவது இந்த கெகலியவிற்குத்தேவையில்லை தானே..?
நாம் மனித உயிரைக்கேட்டால் தான்..?
காய் பிஞ்சுகள் என்று சந்தைக்கு வர வேண்டிய தீனிப் பண்டங்களைப்பற்றியே நினைக்கு அரக்கர்களுக்கு எங்கள் உயிர்கள் விசேட அறுசுவை உணவு வகையில் போன்று எமது உடல்கள் தேவை தானே..?
இதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் நன்றி.


No comments:
Post a Comment