
சீன இராணுவத்தின் அதிஉயர் அதிகாரிகள் இன்று(13) கொழும்புக்குச் சென்றுள்ளனர். தற்சமயம் அங்கே நிலைகொண்டுள்ள சீன இராணுவ அதிகாரிகள் இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியாவைச் சந்திக்கவுள்ளதாகவுள்ளதாகத் தெரியவருகிறது.
சீன மக்கள் இராணுவத்தின் உயரதிகாரியான ஜெனரல் மா ஹக்ஷ்யன் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்தடவை.
இலங்கை இராணுவத்துக்கு பயிற்சிகள் கொடுப்பது தொடர்பாக தாம் கலந்தாலோசிக்கவுள்ளதாக இவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்தியப் பெருங்கடல் பரப்பில் இரகசியமாக ஒரு இராணுவத் தளத்தை அமைக்க சீனா முனைப்புக்காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இவர்களது இலங்கை விஜயம் மிக முக்கியமானதாக அமையலாம்.
ஆனால் சீன இராணுவத்தினரோ இது ஒரு நட்புரீதியான விஜயம் எனவும் இலங்கை இராணுவத்துக்கு சில பயிற்சிகளைக் கொடுக்க தாம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் விடயத்தை பூசி மெழுகும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:
Post a Comment