இது, முன்நகர்வுக்கு ஒருபடியாக கொள்ளலாம். ஆனால், அரசாங்கத்தின் அடுத்த நகர்வுகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது.
இக்கருத்தை தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா வெளியிட்டுள்ளார்
இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கருதப்படுகிறது. இந்தநிலையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி வெளியிட்ட 161 பக்கங்களை கொண்ட அறிக்கையில் தீவிரமான ஒரு குழுவுடன் சண்டையிடும்போது பொதுமக்களின் இழப்புகளை தவிர்க்கமுடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம் சர்வதேசத்துக்கு இலங்கையின் மனிதாபிதான இராணுவ நடவடிக்கை தொடர்பில் ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிக்கை வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், குறித்த அறிக்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு குறைந்தது பொறுப்புக்கூறும் வகையில் அமைந்திருப்பதாக ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோத்தபாய ராஜபக்சவின் அறிக்கையில் அரசாங்கம் எதிர்காலத்தில் இது விடயத்தில் என்ன செய்யப்போகிறது என்பது காட்டப்படவில்லை என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கோத்தபாயவின் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், இலங்கை அரசாங்கம் மீண்டும் கடும்போக்கை கையாளக்கூடும் என்று ஏனைய சில அரசியல் தரப்புகள் எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே இந்த அறிக்கையை வெள்ளைப்பூச்சு என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பை தளமாகக்கொண்ட சட்டம் மற்றும் சமூக நிதியத்தின் தலைவரான ருக்கி பெர்ணான்டோ, கோத்தபாயயவின் அறிக்கையில் போருக்கான அடிப்படைகள் காட்டப்படவில்லை எனவும் தாம் தெரிவுசெய்த சில ஆய்வாளர்களின் கருத்துக்களையே குறித்த அறிக்கை கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment