
முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களுக்கு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தற்போது அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் விடுதலை புலிகள் தற்போது பல்வேறுவித கோணங்களில் சமூகத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், அண்மையில் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் இடம்பெற்றன.இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபியாக கருதப்படும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே மூன்றில் இரண்டு பொரும்பான்மை பலத்தை பெற்றது.இந்த முடிவானது, தமிழீழ விடுதலை புலிகளின் தற்போதைய நிலை குறித்து அரசாங்கத்தை சிந்திக்க வைத்துள்ளது.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அரசாங்கம் பாரிய தோல்வியை சந்தித்துள்ளது.
இது இவ்வாறு இருக்க சர்வதேச வானொலிச் சேவை ஒன்றுக்கு செவ்வி வழங்கிய, மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும், தங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ளர்.
இதற்கான ஏற்பாடுகள் எவையும் தமக்கு செய்து கொடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட தயார் என குறிப்பிட்டுள்ளார்.தங்களுக்கு அடிப்படை உரிமைகள் வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, இலங்கையில் அமைதியான சூழல்நிலை காணப்படுவதாக அரசாங்கம் கூறிவந்தாலும், வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் பொலிஸாரை கண்டு அஞ்சவேண்டிய சூழலே காணப்படுகின்றது.சிங்கள மக்களைப் போன்று தமக்கு சமமான உரிமைகள் கிடைக்கவில்லை என இவர்கள் முறையிடுகின்றனர்.
முன்னாள் போராளிகளை மேலோட்டமாக பார்க்க அமைதியாகவே காணப்பட்டாலும், சற்று நெருங்கிச் சென்று பார்க்கும் போது, யுத்த வடுக்களாலும், உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டிருந்ததைக் அவதானிக்க முடிகிறது.
இதனையே அண்மைய தேர்தல் பெறுபேறுகள் வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றன.இந்த நிலையில் முன்னாள் போராளி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் தமக்கு இன்றும் சுதந்திரம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.காவற்றுறையினர் தம்மை சந்தேகத்துடனேயே நோக்குவதாககவும், தமக்கு இங்கு சமவுரிமைகள் இல்லை எனவும் குறிப்பிடுகிறனர்.
காவற்றுறையினர் திடீரென தமது வீட்டிற்கு வந்து வீட்டைச் சோதனையிடுகின்றனர், அவர்களுக்கு என்ன தேவைப்பட்டது என்பது தமக்கு தெரியவில்லை என முன்னாள் பெண் போராளி ஒருவர் கூறியுள்ளார்.தொழில் வாய்ப்பை பெறுவதிலும், இவர்கள் பெறும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.அரச சேவையில் சரளமான சிங்களம் தெரியாமல் இணைவது கடினம் என கூறப்படுகிறது.
மறுபுறம், வடக்கிலும் கிழக்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் துரித கதியில் இடம்பெற்று வருவதாகவும் முன்னாள் போராளிகள் முறையிடுகின்றனர்.அத்துடன், மொழிப்பிரயோகத்திலும் இவர்கள் பெறும் சிக்கல் நிலையை எதிர்கொள்கின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து பதிவாகின்றன.இது 1980 களில் நாட்டினை அழிவுப் பாதைக்கு இட்டுச்சென்ற உலகின் பயங்கரமான பொதுமக்கள் அழிவுச் சம்பவத்தினை ஒத்ததாகவே காணப்படுகிறது.
முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர், இலங்கையில் இவ்வாறான நிலையிலேயே தற்போது உள்ளனர்.


No comments:
Post a Comment