மானாட மயிலாட கலைஞர் தொலைக்காட்சியில் பாத்திருப்பீங்க , ஆனா டெல்லியில் சி.பி.ஐ ஆட்டத்தை இன்னும் பாக்கல இல்ல! இவங்களும் இப்படி ஒரு ஆட்டத்தை ஆரம்பிச்சு இருக்காங்கப்பா! கலைஞர் குடும்பத்துக்கு மேல ஒரு அட்டாக் ஆரம்பமாகி இருக்கு. இந்த முறை ஆட்களை கைதுசெய்யாம சொத்துகளை முடக்கி, கலைஞர் ரி.வியையும் முடக்கி அவருக்கு இருக்கும் கொஞ்சநெஞ்ச மீடியாப் பவரையும் இல்லாம் செய்ய புது திட்டம் தீட்டியிருக்காங்களாம்! அது யார் எண்டு எல்லாம் கேட்காதிங்க அது பரம ரகசியம், ஆனால் வெளியில் வந்த விடையங்களே போதுமே!கலைஞர் டி.வி.க்கு சொந்தமான ரூ.215 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தமிழகத்தில் இருக்காம். சென்னை கலைஞர் டி.வி. ஸ்டூடியோ, மற்றும் அலுவலகங்களும் இதில் அடக்கம். இவை அனைத்தையும் முடக்குவதே தற்போதைய திட்டம். குறிப்பாச் சொல்லப்போனால் ஸ்பெக்ரம் ஊழலில் சுமார் 200 கோடிக்கும் மேலான பணம், கலைஞர் ரீ.வி ஊடாகத்தான் பரிமாறப்பட்டிருக்கு என்று நாம் சொல்லல! சி.பி.ஐ சொல்லுது. 3வது குற்றப்பத்திரிகையை இவர்கள் தாக்கல் செய்யவுள்ளனர் என்பது தான் இப்போது உள்ள ஹாட் நியூஸ். இந்த 3வது குற்றப்பத்திரிகையில் யார் யார் பேர் அடங்குகிறது, இல்லாட்டி எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டிருக்கு எல்லாம் புட்டு புட்டு எண்டு வைத்திருக்காம்!
"ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம், கனிமொழிவரை எப்படி வந்தது?" இந்தக் கேள்விக்கு சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் குறிப்பிடும் பதில் - ஸ்வான் தகவல் தொடர்பு கம்பெனி ஊடாக, ரூ.214 கோடி சென்னைக்கு வந்தது. இந்தப் பணம் கலைஞர் டி.வி. வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்பதுதான். இந்த விவகாரத்தில் முதலில் ராசா அகப்பட்டார். சி.பி.ஐ. அவரைக் குடையத் தொடங்கிய உடனேயே, இவர்கள் பதற்றமடைந்தார்கள். முட்டாள்தனமான காரியம் ஒன்றைச் செய்தார்கள். அது என்ன என்று கேட்கிறீர்களா? இந்த 214 கோடியை வட்டியுடன் சேர்த்து ஸ்வான் தகவல் தொடர்பு கம்பெனிக்கு இவர்கள் திருப்பிக் கொடுத்தது தான். அதாவது இவர்கள் கடன் பெற்றார்களாம் வட்டியோடு திருப்பிக் கொடுத்தார்களாம் என்று கணக்கு காட்டப்பட்டது.
இதனை எல்லாம் நம்ப சி.பி.ஐ என்ன காதில பூவோட சுத்துதா ? பணம் இந்தக் கம்பெனிக்கு எப்படி வந்தது என்று கேட்டா அங்க சிக்கிக்கும் இல்ல? இது தான் இவர்கள் செய்த முட்டாள் தனம். கிட்டத்தட்ட 200 கோடி ரூபா பணத்தை யாரும் ஒரு பேங்க் கணக்கில் வைத்திருக்கப் போவதில்லை. கலைஞர் டி.வி.யும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் கடன் வாங்கிய பணம் என்று வேறு சொல்கிறார்கள். கடன் வாங்கி, பேங்கில் சும்மா போட்டு வைத்திருப்பார்களா எவராவது? திடீரென ஒருநாள் 200 கோடி ரூபா பணம் வட்டியுடன் திருப்பிக் கொடுப்பது என்று முடிவு செய்கிறார்கள். பேங்கில் இவர்களது கணக்கில் 200 கோடி கிடையாது. ஆனால், கடன் அடைக்கப்படுகிறது. இந்த முட்டாள்தனமான காரியத்தால், "திருப்பிக் கொடுக்கப்பட்ட பணம் எப்படி வந்தது?" என்று துருவத் தொடங்கியது சி.பி.ஐ.
ஸ்வான் கம்பெனியில் இருந்து 214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியதை திருப்பி கொடுப்பதில் 19 கொல்கத்தா நிறுவனங்கள் நிதியுதவி செய்திருப்பதாக கலைஞர் டி.வி. தனது டாக்குமென்ட்களில் காட்டியிருந்தது. இதோ, அடுத்த கேள்வி வருகின்றது. "இந்த 19 நிறுவனங்களும் உங்களுக்கு (கலைஞர் டி.வி.க்கு) ஏன் பணம் தரவேண்டும்? நீங்கள் கடனை அடைக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு என்ன ஆர்வம்?"
இதற்குமேல் பொய் சொல்ல முடியாத கலைஞர் டி.வி., திருதிருவென முழிக்கத் தொடங்கியிருக்கு இனி என்ன நடக்குமோ தெரியாது. ஆட்சியும் இல்லை அதிகாரமும் கையில் இல்லை! பொறுத்தவேளை பார்த்து அம்மா சோனியாவும் கையை விரித்துவிட்டார் போல இருக்கே! காலை வாருவது சோனியாவுக்கு ஒன்றும் புதுசான விடையம் இல்லை....
அதிர்வு


No comments:
Post a Comment