மாக்கம் நகரில் Brimley & 14th Ave சந்திப்புக்கு அருகாமையில், 4855 - 14th Avenue இல் அமைந்துள்ளது சான் தயாபரனின் தேர்தல் அலுவலகம். அலுவலக உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் பல முக்கிய மத்திய, மாநில பாராளுமன்ற உறுப்பினர்களுடன், பல்லின சமூகத் தலைவர்களும் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முக்கித்துவம் வாய்ந்த இவ் ஒன்ராரியோ தேர்தல் களத்தில் தமிழர் ஒருவரின் அதிகரித்த வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு ரொரன்ரோ பெரும் பாகம் எங்கிருந்தும் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வரும் ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்திறப்பு விழாவைத் தொடர்ந்து கலந்து கொள்ளும் முக்கியமானவர்கள் சான் தயாபரனை ஆதரித்து தொகுதியில் சூறாவளிப்பிரச்சாரத்திலும் ஈடுபடவுள்ளதால் தமிழ் உறவுகள் அனைவரையும் பெரும் எண்ணிக்கையில் வருமாறு சான் தயாபரன் தேர்தல் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலதிக தொடர்புகளுக்கு
905-456-8666 என்ற அலுவலக தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.


No comments:
Post a Comment