
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இரண்டாம் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இரண்டாம் தலைவராகக் கருதப்படும் திருஞானசம்பந்தன் மணிவண்ணன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிவண்ணன், புலிகளின் சர்வதேச வலையமைப்பின் தலைவராகக் கருதப்படும் கஸ்ட்ரோவின் நெருங்கிய சகா எனத் தெரிவிக்கப்படுகிறது.
மலேசியாவில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், இலங்கைக்கு விரைவில் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுகக்ப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கைது செய்பய்பட்டதனைத் தொடர்ந்து, மணிவண்ணன் தலைமறைவாக வாழ்ந்து வந்ததார்.


No comments:
Post a Comment