
விடுதலைப்புலிகளின் ஆரம்ப கட்ட காலங்களில் தமிழக மக்களின் பெரும் ஆதரவுடன் இயக்கம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. இந்திய முன்னாள் பிரதமர் ராஐிவ்காந்தியின் படுகொலையின் பின்னர் அங்கிருங்கும் அரசியல்வாதிகளின் வழிகாட்டலில் தமிழிக மக்கள் மத்தியில் புலிகள் தொடர்பான சில மனக் கசப்புகள் ஏற்பட தொடங்கின.
ஆனால் வன்னியில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை கொத்துக் கொத்தாக தமிழர்களின் உயிர்கள் பலியாகி கொண்டிருந்த சமயத்தில் கொதிந்தெழுந்தது தமிழகம். அந்த வீரியம் குறையாமல் இன்னும் அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
போர் முடிந்தாலும் தமிழக மக்களின் மனங்களில் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒரு கதாநாயகனாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றார். அந்தவகையில் தேசியத்தலைவர் மீது பற்றுக் கொண்ட தமிழகத்தின் ஏற்காடு பிரதேசத்தில் வாழும் தமிழ் உணர்வாளர் ஒருவர் தனது உணவகம் ஒன்றை தலைவரின் பெயரில் ஆரம்பித்ததுடன் அவரின் படம் மற்றும் இயக்கத்தின் சின்னமான புலியினையும் பதிந்துள்ளார்.


No comments:
Post a Comment