உள்ளூர் அலைவரிசைகளில் ஒளிபரப்பான இந்த காட்சிகள் அடங்கிய காணொளியில் நிச்சயமாக அந்த தொலைக்காட்சிகளின் சின்னங்கள்(இலச்சினை) இடம்பெற்றிருக்கும். ஆனால் ஜுலை 27ம் நாள் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளியில் உள்ளூர் தொலைக்காட்சிகளின் சின்னங்கள் இருக்கவில்லை. அதாவது இலங்கை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய அதே சில காட்சிகளை சனல்4 ஒளிபரப்பியது, ஆனால் அதில் இலங்கை தொலைக்காட்சியின் இலச்சினைகள் இல்லை. அதில் சனல்௪ தொலைக்காட்சியின் சின்னம் மட்டுமே இருந்தது என்கிறது இலங்கை அரசு.
இதிலிருந்து உள்ளூர் தொலைக்காட்சிகளுக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொளிகள் பிரதி எடுக்கப்பட்டு சனல் 4 தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். அதுவும் சும்மா அல்ல ஒரிஜினல் பிரின்டுகள் சனல் 4 க்கு விற்கப்பட்டுள்ளது. அரசாங்க தொலைக்காட்சி குழுவினரே போர்க்களக் காட்சிகளைப் படம்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, தன் மீதும், உயிரை பணயம் வைத்து போர்க்களக் காட்சிகளை பதிவு செய்த ரூபவாகினி ஊடகவியலாளரான சமன்குமார ராமவிக்கிரம மீதும் சிலர் சேறு பூச முனைவதாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளின் மூலப்பிரதி சனல் 4 தொலைக்காட்சிக்கு எவ்வாறு கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்- அந்தக் காட்சிகளைப் படம்பிடித்த அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ராமவிக்கிரமவே அவற்றை வெளிநாட்டு தொலைகாட்சிகளுக்கு விற்றிருப்பது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, ராமவிக்கிரம போர்முனையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது புலிகளின் பல மடிக்கணினிகளையும் இலத்திரனியல் பொருட்களையும் தனது வாகனத்தில் திருடிக் கொண்டு சென்றபோது மதவாச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரை அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்லவே தலையிட்டு விடுவித்திருந்தார் என்பது வேறு விடையம். ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தற்போது பிரச்சனையில் மாட்டியுள்ளார். அதாவது இவ்வளவு நாளும் சனல் 4 ஒளிபரப்பிய காணொளிகள் பொய்யானது என்றார்கள், இப்போது அது ரூபாவாகினியின் வீடியோ என்கிறார்கள். அத்தோடு இதனைத் திருடி விற்றதாகச் சொல்லப்படும் ராமவிக்கிரம, சவீந்திர சில்வாவின் நெருங்கிய சகா என்றும் சொல்லப்படுகிறது.
அதிர்வு


No comments:
Post a Comment