அன்பான புலம்பெயர்வாழ் கலைஞர்களுக்கு!தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் - பிரான்சு தெரிவிக்கும் அன்பான வேண்டுகோள் !
எம் உயிரோடும், உணர்வோடும் கலந்துவிட்டவர்கள் தமிழீழ தேசிய மாவீரர்கள், காலத்தால் அழிக்க முடியாத எங்கள் கண்கண்ட தெய்வங்களான மாவீரர்கள் உலகில் கடசித்தமிழன் இருக்கும் வரை வழிபடவேண்டிய வரலாற்று நாயகர்கள் இவர்கள்.
2011 தமிழீழ தேசிய மாவீரர் நாளான நவம்பர் 27 ம் நாளில் மாவீரர்களின் நினைவு சுமந்த பாடல் இறுவெட்டுக்கள் வெளியிடவுள்ளோம். இதற்கான பாடல்களை கவிஞர்கள் எழுதியும், கலைஞர்கள் மெட்டமைத்தும், இசையமைத்தும் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். எதிர்வரும் ஒக்ரோபர் 30ம் நாளுக்கு முன்னராக நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமோ அனுப்பி வைக்கலாம்.
அனுப்புபவர்கள் உங்கள் விபரங்களையும் விபரமாக தந்துதவுமாறு கேட்டுக்கொள்வதோடு தேவைகளை கருத்திற்கொண்டு பாடல்களில் திருத்தங்களும், சேர்ப்புகளையும் தமிழர் கலைபண்பாட்டுக்கழக இசைக்குழு மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் - பிரான்சு
தொடர்புகளுக்கு: - 01 43 58 11 42. 06 64 72 70 75
மின்னஞ்சல் முகவரி:- kalaipanpadu.fr@gmail.com


No comments:
Post a Comment