
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே ஊர்மேனியழகியான் கிராமத்தின் கிணற்றில் வேப்பங்குளைகளால் சுருட்டப்பட்டு பெண் பிரேதம் ஒன்று கிடப்பதாக தகவல்வர. ஸ்பாட்டுக்குச் சென்ற சுரண்டை போலீசார் விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்த ராய்வாரி என்பதும் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்த்து.
ராய்வாரி, விஷ்ணு என்பவனின் 2வது மனைவி. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஊர்மேனியழகியான் கிராமத்திற்கு வந்தவர்கள் அங்குள்ள கோழிப்பணணையில் வேலை செய்து வந்தார்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டதக தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவர கணவன் விஷ்ணு தலை மறைவாகி இருந்தான்.
நேற்று தன் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக்க திரும்பி வந்த விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் பற்றி வாக்கு மூலமாகவே சொன்னது பதறவைக்கிறது.
நேபாளத்தைச் சார்ந்த நான் குமாரி என்கிற நேபாள பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் எங்களுக்கு மூன்று பிள்ளைகள் குன்னூரில் நாங்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துவந்த்தோம் அங்கே வேலை செய்த அஸ்ஸாமைச் சேர்ந்த ராய்வாரி என்ற பெண்ணை விரும்பி 2ம் திருமாணம் செய்துகொண்டேன். குன்னூரில் வேலை இல்லாத்தால் நாங்கள் ஊர்மேனியழகியான் கிராமத்திற்கு வந்தோம். அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்த்தோம்.
எனது இரண்டு மனைவிகளுக்குள் சக்களத்தி சண்டை நடக்கும். ராய்வாரி குடிப்பழக்கம் கொண்டவள் கோழிப்பண்ணையில் வேலை செய்துவந்த திலக் என்பவரோடு எனக்கு நட்பு ஏற்பட்டது.
கடந்த 13ந் தேதி நான் என் மனைவி ராய்வாரி திலக் மூன்று பேரும் அங்குள்ள காற்றாலைப் பக்கம் மது அருந்தினோம் பின்பு என் மனைவி ராய்வாரி அவளது இருப்பிடத்திற்குச் சென்று விட்டாள். நண்பன் திலக்,நானும் சேர்த்து என் முதல் மனைவி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இடையில் திடீரென திலக் வெளியே கிளம்பிச் சென்றான் எனக்கு சந்தேகம் வந்த்து. பின் தொடர்ந்து சென்ற்றேன் அவனும் என் மனைவி ராய்வாரியும் சல்லாபத்தில் இருந்தது கண்டு ஆந்திரம் கொண்டேன். திலக்கைத் தாக்கியதில் அவன் தப்பி விட்டான் ராய்வாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து அவள் போதையின் உச்சத்திலிருந்த போது வெறித்தனமாக அடித்துக் கொன்று கிணற்றில் வீசிவிட்டேன் என ஒப்புதலாகச் சொண்ன விஷ்ணுவைப் போலீசார் கைது செய்தனர்.
படங்கள்: ராம்குமார்





No comments:
Post a Comment