யாழ்ப்பாணம் குருநகரில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரை மிக மோசமாக தாக்கிவிட்டு 9 பவுண் தங்கத் தாலிக்கொடியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருக்கின்றார்கள்.நடைபெற்ற சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, கடந்த 15 ம் திகதி ஜூன் மாதம் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் தனது மகளை பாடசாலையில் இருந்து மிதிவண்டியில் வீட்டிற்கு கூட்டிவரும்போது குரூசோ வீதியில் திடீரென்று உந்துருளியில் வந்த இரு கொள்ளையர்களால் திருமதி அருள்மொழி என்ற இளம் தாய் அடித்து கீழே தள்ளிவிடப்பட்டிருக்கின்றார்.
பின்னர் அந்த இளம்பெண் மீண்டும் கொள்ளையர்களால் மிகமோசமாக தாக்கப்பட்டு காயத்திற்குள்ளாக்கப்பட்ட பின் 9 பவுண் தங்க தாலிக்கொடியை பறித்துச் சென்றிருக்கிறார்கள். மிக அண்மைக் காலமாக யாழ் நகரில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.


No comments:
Post a Comment