
இலங்கையில் நேற்று மட்டும் (16) மாத்திரம் மூன்று சிறுமிகள் மீது வல்லுறவு புரியப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.மூன்று சிறுமிகள் மீது வல்லுறவு புரிந்த மிலேச்சத்தனமான சம்பவங்களே பதிவாகியுள்ளன.
இதில் முதல் சம்பவம் நான்கு வயதான சிறுமிக்கு நேர்ந்துள்ளது. 32 வயதான நபர் இந்தச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். மஹியங்கனை கப்புறுகஸ்முல்ல – சொரபொர பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது சம்பவம் கம்புறுபிட்டிய – திஹகொடஹேன – கசகல பகுதியில் 13 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மூன்றாவது சம்பவத்தில் வாரியபொல – அவுலேகம பிரதேசத்தில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் குறைந்த்து மூன்று சிறுமிகள் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன ஆனால் பொலிஸில் பதியப்படாத சம்பவங்கள் எத்தனையோ.?


No comments:
Post a Comment