
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இளைஞர்குழுக்களின் அடாவடித்தனங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களுக்கு எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி மதுஅருந்தி விட்டு வீதிகளில் செல்லும் யுவதிகளிடம் தகாதமுறையில் நடந்துகொள்வதும் பின்னர் சந்திகளில் இருந்து குழுக்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுதும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளார்கள் இவ்வாறன நிலையில் சிறீலங்கா படையினரும் காவல்துறையினரும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள் குறிப்பாக கரவெட்டிப்பகுதியில் இவ்வாறன நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை நேற்று இடம்பெற்ற சம்பவங்களில் நான்கிற்கு மேற்பட்டவர்கள் வாழ் வெட்டிற்கு இலக்காகி காயம் அடைந்துள்ளார்கள். கடந்த 1ஆம் நாள் வடமராட்சி வத்திராயன் வடக்கில் வீட்டிற்குள் புகுந்த கும்பல் தாக்கியதில் இருவர் காயம் அடைந்துள்ளார்கள்.குப்பிளான் சந்தியில் நேற்று முன்னாள் இருகுழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இரண்டு போர் காயம் அடைந்துள்ளார்கள்.யாழ் மருத்துவமனை வீதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்கள் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் இளைஞர்களின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:
Post a Comment