இலங்கையின் புகழ் பூத்த கல்விமான்களில் ஒருவரான பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி அவர்கள் நேற்று இரவு 8.20 மணி அளவில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது...சுகவீனமான நிலையிலிருந்த அவர் இருதயம் செயலிழந்த நிலையில் நேற்று (06.07.2011) காலமானதாக கூறப்படுகிறது...
இறக்கும் போது அவருக்கு வயது 79...
இவர் யாழ்ப்பாணம் கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்டவராவார்...
தமிழ் இலக்கிய உலகுக்கு மாபெரும் பங்காற்றிய பேராசிரியர் சிவத்தம்பி ஏராளமான புத்தகங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்...
பல துறைகளிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கிய ஈழத்தின் மூத்த பேராசிரியரின் மறைவால் தேசமே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது....
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்...
GTV செய்திகள்



No comments:
Post a Comment