யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்புலத் தலைவராகவும், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து உள்ளார். சிவத்தம்பி, சிறந்த விமர்சகர். மேலை நாட்டு விமர்சன முறையை தமிழ் இலக்கியத்தில் அறிமுகம் செய்தவர். தொல்காப்பியத்தைப் படித்து, தமிழ் இலக்கணத்தில் கரை கண்டவர்.
தொல்காப்பியத்தை ஒருவர் எழுதவில்லை; பலர் எழுதி இருக்கிறார்கள் என்ற கருத்தை முன்வைத்தவர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருள்சோதியில் கலந்தார் என்பதற்கு, வரலாற்று ரீதியாக பகுத்தறிவு விளக்கத்தைக் கொடுத்தவர். சிறந்த பொது உடைமைவாதி, பகுத்தறிவாளர்.
அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தில், உலக அமைப்பின் பொதுச் செயலாளராக, தஞ்சாவூர் உலகத் தமிழ் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டவர். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று கூறி தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இலங்கை சுதந்திராக் கட்சித் தவைர்களுடன் நெருக்கமாக இருந்த சிவத்தம்பி, நாடாளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகப் பணி ஆற்றினார். சிவத்தம்பியின் தந்தையார் கார்த்திகேசு, சைவப்புலவராகத் தமிழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். இலங்கையின் வடமராட்சி பகுதி ஈன்ற சிறந்த புலமையாளர்களுள் ஒருவர் சிவத்தம்பி.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த வடமராட்சி தமிழ் இலக்கியவாதிகள் நிறைந்த பகுதி என்பதால், இலங்கை அரசு வடமராட்சி பகுதியைக் குறிவைத்துத் தாக்கியது. மேதகு பிரபாகரன் அவர்களுக்கும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுக்கும் உறவினரான பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவு, தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.
அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாயகம் வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்
07-07-2011 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்


No comments:
Post a Comment