யாழ்ப்பாணம், பலாலி வானூர்தி நிலையம் விரைவில் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்திய உதவியுடன் பலாலி வானூர்தி நிலைய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள் முடியும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பலாலி வானூர்தி நிலையத்துக்கு வரும் மக்களின் நலன் கருதி, காங்கேசன்துறை - பருத்தித்துறை மற்றும் பலாலி பிரதேங்களின் பாதைகளை செப்பனிடும் பணிகள் இடம்பெறுகின்றன


No comments:
Post a Comment