இந்திய மத்திய ஜவுளித் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் அளித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரித்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், தயாநிதி மாறன் தொடர்பு குறித்தும் விசாரித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்தது.அதனைத் தொடர்ந்து தயாநிதி மாறன் தனது அமைச்சரவை பொறுப்பில் இருந்து விலகும் கடிதத்தை பிரதமரிடம் அளித்துள்ளார். பிரதமரின் இல்லத்திற்கு இன்று காலை சென்ற தயாநிதி மாறன், தனது பதவி விலகல் கடிதத்தை நேரிடையாக அளித்தார் என்று டெல்லி செயதிகள் உறுதிபடுத்துகின்றன.


No comments:
Post a Comment