
இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களம் ஆவணத் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.ஈழத்தில் நடந்த உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய, கொடூரமான இனவெறிப் படுகொலை கோர வெறியாட்டத்தின் காட்சிகளை லண்டனைச் சேர்ந்த சனல் 4 தொலைக்காட்சி ஆவணத் திரைப்படமாக தயாரித்து வெளியிட்டு உலகையே அதிரச் செய்தது.
இது குறித்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி நிலையங்கள், நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதைப் பற்றிய செய்திகளை வெளியிட்டன. ஆனால் டெல்லியிலிருந்து செயல்படும் ஆங்கில டிவி நிறுவனங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை.
இந்த நிலையில், ஹெட்லைன்ஸ் ருடே இந்த பதைபதைக்க வைக்கும் ஆவணத் திரைப்படத்தை ஒளிபரப்பவுள்ளது.
மூன்று நாட்கள் இதை ஒளிபரப்புகிறது ஹெட்லைன்ஸ் டுடே டிவி. இன்று இரவு 10 மணிக்கு முதல் பகுதி ஒளிபரப்பாகிறது.http://indiatoday.intoday.in/site/video/headlines-today-to-air-lanka-video/1/143904.html
நாளை வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கும், மறுநாள் சனிக்கிழமை 10 மணிக்கும் மற்ற பகுதிகள் ஒளிபரப்பாகவுள்ளன.
இன்று காலை முதலே இலங்கையின் கொலைக்களம் குறித்த துணுக்குச் செய்திகளை ஹெட்லைன்ஸ் ருடே ஒளிபரப்பி வருகிறது.


No comments:
Post a Comment