
இலங்கைக்கு எதிராக நாளை தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநில தலைநகரங்களிலும் நடைபெறவுள்ள விழிப்புணர்வு பிரசாரத்தில் தமிழரினை கலந்துகொள்ளுமாறு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
இலங்கைத் தலைவர் யுத்தகுற்றவாளி என ஐ.நா. விசாரணை குழு அளித்த பரிந்துரையை ஏற்று, அவர் மீது சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும், இந்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை ஆதரித்தும், இலங்கை தமிழருக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும், அகில இந்திய அளவில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு தீர்மானம் நிறைவேற்றியது.
அதன் அடிப்படையில், தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநில தலைநகர்களிலும், நாளை (8ம் திகதி) நடத்தப்பட இருக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொள்ளுமாறு, தமிழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment